திரில்லர் கதையில் காஜல் மிரட்டும் “லைவ் டெலிகாஸ்ட்” டிரைலர் இதோ..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் பேயாக நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு .இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார்.இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் .
காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் ஆனந்தி,வைபவ் , டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தினை வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரின் டிரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025