திகில் கலந்து மிரட்டலாக வெளியான ‘பெங்குயின்’ படத்தின் டீசர் இதோ.!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டிரைலர் முன்னணி நடிகர்களான தனுஷ், மோகன்லால் மற்றும் நானி அவர்களால் வெளியிடப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களால் வெளியிடப்பட்டு பெரிய அளவில் ரீச்சானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை இன்று பிரபல முன்னணி நடிகர்களால் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. பெங்குயின் படத்தின் தமிழ் டிரைலர் தனுஷ் அவர்களாலும், மலையாள டிரைலரை மோகன்லால் அவர்களாலும், தெலுங்கு டிரைலரை நானி அவர்களாலும் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திகில் கலந்து மிரட்டல் நிறைந்த பெங்குயின் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அம்மாவான கீர்த்தி சுரேஷ் தனது மகனான அஜய்யை தேடி கண்டுபிடிக்க நடத்தும் போராட்டத்தில் அவர் சந்திக்கும் மர்ம விஷயங்கள் நிறைந்த அந்த டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025