இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இயக்கத்தில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் குறும்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் துல்கரின் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடி த்தால் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் நடிகை திரிஷாவிற்கு ஐபோனில் குறும்படம் எவ்வாறு எடுப்பது என்று வீடியோ கால் மூலம் சொல்லி கொடுத்திருந்தார்.
அதிலிருந்து இவர்கள் இருவரும் இணைந்து குறும்படம் எடுக்க போவதாகவும் கூறப்பட்டது. சிலர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவரது இயக்கத்தில் திரிஷாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் குறும்படத்தின் டீசரை தற்போது வெளியிட்டுள்ளார். இது விண்ணை தாண்டி வருவாயா-2 என்றும் கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சிம்பு மற்றும் திரிஷாவின் நடிப்பில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாடல்களும், காட்சிகளும் அனைவரது பேவரட்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி…
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை…
கொச்சி : கேரளா மாநிலம் கொச்சியில் பாலாரிவட்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கலூர் மைதானத்தில் நடிகை திவ்யா உன்னி…
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…