இனி ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் உதயமாகும் தமிழ்மொழி..!

Default Image

இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) இந்தியாவில் அமைந்துள்ள உயர்கல்விக்கான தன்னாட்சி பொது நிறுவனங்கள் ஆகும்.
இந்தியா முழுவது அமைந்துள்ள இந்நிறுவனம் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்குக்கான ஜே.இ.இ (joint entrance examination) நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இதற்கு முன்னர் (ஐ.ஐ.டி) படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவு தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி , குஜராத்தி போன்ற சில மொழிகளில் மட்டுமே எழுத்தி வந்தனர். இதனால் மற்ற மொழியில் பயிலும் மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு வரும் 2021-ம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, உருது உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கிடையே  மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று வருகிறார்கள்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்