ஆஸ்துமா,நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு ஒரே மருந்து இதோ..!!

Default Image

நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய்
என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

நெல்லிக்காயை விதை நீக்கி இடித்து சாறு பிழிந்து சம அளவு சர்க்கரைத் சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்து தூளாக்கி சம அளவு சர்க்கரைத் சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வென்னீர் அருந்தலாம். இதனால் கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக மன உளைச்சலால் ஏற்படும் கை உதறல் குணமாகும்.

பெரும்பாலும் கைகள் நடுங்குவதை நரம்புத் தளர்ச்சி என்றோ, நடுக்கல்வாதம் என்றோ எண்ணி பல உயர்ந்த மருந்துகளை அளித்தும் பலன் கிட்டாத நிலையில் நெல்லி வற்றல் சம்பந்தப்பட்ட மருந்துகள் சிறப்பான குணத்தை அளிக்கும்.

மதுமேக நோயாளிகளுக்கு நெல்லியுடன் கறிமஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவுக்கு சேர்த்து அரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.

ஒரு நெல்லிக்கனி 6 ஆரஞ்சுகளுக்கு சமமாம்….தினமும் நெல்லிக்கனிசாறை (குறைந்தது 3 மாதங்கள்) தொடர்ந்து அருந்திவந்தால் கிடைக்கும் 7 பலன்கள்….

1. உடலில் வைட்டமின் C பெருகும்

2.முடிவிழுதல் நிற்கும்…புதிதாக முடிகள் வளரும் …

3.கண் பார்வை கூர்மையாகும்..மாலைக்கண் வியாதி நீங்கும்…

4.தேனுடன் சேர்த்து அருந்தி வந்தால், சக்கரை வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்

5.மதிய உணவிற்கு பின்னர் , இந்த சாரை பால்,தென் மற்றும் நெய்யுடன் சேர்த்து அருந்திவந்தால், பைல் (PILES ) விலகிபோகும் ..

6.மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளை தீர்க்கும்….

7.ரத்தத்திலுள்ள சிவப்பணு க்களை பெருக செய்து,ரத்தம் சுத்தமடையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்