கோடிகளை வாரி இறைத்த அண்ணாச்சி.! பாலிவுட் நடிகைக்கு தூண்டில்.! அந்த விழாவின் மறுபக்கம் இதோ..,
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ” தி லெஜெண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜே.டி. & ஜெர்ரி தான் இயக்குகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான இசைவெளியீட்டு விழா கடந்த மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய நடிகைகள் கலந்து கொண்டார்கள்.
இதனையடுத்து, இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் 6 கோடி ரூபாய் செலவானதாம். 10 ஹீரோயின்கள் போதாது என்று பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிடம் இந்த விழாவிற்கு வருவதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாம். நிகழ்ச்சியில், கலந்து கொள்ள கத்ரீனா கைஃப்பும் சம்மதம் தெரிவித்து சம்பளமாக 2கோடி கேட்டுள்ளாராம்.
இதற்கு தி லெஜண்ட் தரப்பிலிருந்து முதலில் யோசிக்க பின், அவரும் ஓகே சொல்லி பணத்தையும் கொடுத்துவிட்டனராம். ஆனால், கத்ரீனா கைஃப் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால், தி லெஜெண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரால் கலந்து கொள்ளமுடியவில்லை.
இசை வெளியீட்டு விழாவிற்கே கோடிகளை வாரி இறைத்த அண்ணாச்சி அடுத்தடுத்து படங்கள் நடித்தால் மிகப்பெரிய பட்ஜெட்டில் தான் நடிப்பார் என்கிறது கோலிவுட் வட்டாரம். மேலும். இந்த தி லெஜெண்ட் படம் அடுத்த மாதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.