கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம் “கேஜிஎப் 1”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். அதைபோல் வரவேற்புக்கு ஏற்றது போல் படத்தின் வசூலும் தாறுமாறாக செய்துள்ளது.
அதன்படி, கேஜிஎப் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியா முழுவதும் 134.5 கோடி வசூல் செய்துள்ளது. இதனை உறுதி படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். மேலும், இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…