ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், தற்போது தமிழில் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்கும் படங்களை பற்றி பார்ப்போம்.
அயலான் : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் : இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தி பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
கோப்ரா : இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நதிகளிலேயே நீராடும் சூரியன்: இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள நதிகளிலேயே நீராடும் சூரியன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
பத்துதல : இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் சிம்பு நடிக்கவுள்ள பத்துதல படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இதுமட்டுமின்றி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…