கர்ணன் படத்திலிருந்து வெளியான “பண்டாரத்தி புராணம்” பாடல் இதோ..!

கர்ணன் படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆம் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.03க்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது மிகவும் சிறப்பான இசையில் வெளியாகியுள்ள இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார் மேலும் யுகபாரதி எழுதியுள்ளார். இதோ அந்த பாடல்.
“பண்டாரத்தி எனும் காலப்பறவை ஏமராஜாவின் மாடவிளக்கான கதை”
❤️❤️#Karnan2ndSingleOnMarch2
@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @RamalingamTha @thinkmusicindia @LaL_Director @rajishavijayan @KarnanTheMovie ???????? https://t.co/JtHb2E8GAI via @YouTube— Mari Selvaraj (@mari_selvaraj) March 2, 2021