லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரிலிருந்து ஆராரிரோ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு . இவர் இயக்கத்தில் பார்ட்டி எனும் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு படத்தினை இயக்கி வருகிறார். இதனிடையே ஓடிடி தளத்திற்காக ‘லைவ் டெலிகாஸ்ட்’ எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார் .
காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கயல் ஆனந்தி, வைபவ் ,டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தினை வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் வெளியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து படத்திற்கான டிரைலர் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திலிருந்து ஆராரிரோ என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அந்த பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…