மர்மம் நிறைந்த அரண்மனை 3 படத்தின் திகில் டிரைலர் இதோ.!
அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களை வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் அரண்மனை. இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் உருவாகியுள்ளது.
இந்த மூன்றாம் பாகத்தில் ஆர்யா, சுந்தர் சி, சாக்ஷி அகர்வால், ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். திகில் நிறைந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுத பூஜையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான டிரைலர் வெளியீடபட்டுள்ளது. டிரைலரில் அட்டகாசமான காமெடி கலந்து திகில் நிறைந்துள்ளதால் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
The spooktacular #Aranmanai3Trailer is out now!
Team #Aranmanai3 will see you in theatres soon!????????https://t.co/XLWNzCKiqY#SundarC @RedGiantMovies_@Udhaystalin @arya_offl @khushsundar @CSathyaOfficial @RaashiiKhanna_ @uksrr @FennyOliver @iyogibabu @RIAZtheboss pic.twitter.com/fE3kUnMIj9
— Saregama South (@saregamasouth) September 30, 2021