காதலில் விழுந்த பாகுபலி பட வில்லன்.! புகைப்படத்துடன் இதோ.!

ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி , சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இதில் வில்லனாக நடித்த ராணா டக்குபதி இந்த படத்தின் மூலம் பிரபலமானார். அதனையடுத்து பல தெலுங்கு படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவரும் காதலில் விழுந்துள்ளார் என்று தெரிய வருகிறது. தற்போது பல பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
And she said Yes 🙂 ❤️ pic.twitter.com/iu1GZxhTeN
— Rana Daggubati (@RanaDaggubati) May 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025