இன்றைய (14/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
மேஷம் : இன்று உங்கள் மனதில் ஏற்படும் பதட்டத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை எண்ணங்களை வளர்க்காதீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் சாதகமாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பது ஏற்றதல்ல.
மிதுனம் : இன்று மகிழ்வுடன் இருப்பீர்கள். மனதில் தெளிவு இருக்கும்.
கடகம் : இன்றைய நாளை ஆன்மீக ஈடுபாட்டிற்கு பயன்படுத்துங்கள். பிரார்த்தனை ஒன்றே திருப்தி காண சிறந்த வழி ஆகும்.
சிம்மம் : இன்று நெருங்கிய நண்பர்களின் ஆலோசனை பெறுதல் நல்லது. இதன் மூலம் நட்பின் சிறப்பையும் உணர முடியும்.
கன்னி : இன்று காணப்படும் கடினமான சவால்களைஎதிர்கொள்ள வேண்டியிருக்கும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
துலாம் : இன்று முன்னேற்றகரமான நாள். உங்கள் ஆர்வங்களை மேம்படுத்தும் பல வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் : இன்று வளர்ச்சி காண்பீர்கள். கடினமான செயல்கள் கூட இன்று எளிதாகச் செய்வீர்கள்.
தனுசு : இன்றைய நாளை மகிழ்ச்சியாக நீங்கள் வழி தேடுவீர்கள். விரைவான முடிவுகளால் முன்னேற்றம் கிடைக்காது.
மகரம் : இன்று ஆன்மீக விழா மற்றும் சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு திருப்தியடைவீர்கள்.அது உங்களுக்கு ஆறுதல் தரும்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் பணிகளை எளிதில் முடிப்பீர்கள்.
மீனம் : இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். இசை அதிர்ஷ்டம் காணப்படும்.