இன்றைய (06/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Default Image

மேஷம் : இன்று திறமையான திட்டமிடல் மூலம் உங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். ஆன்மீகம் பயணங்கள் இன்று உங்களுக்கு திருப்தியை கொடுக்கும்.

ரிஷபம் : இன்றைய நாள் திருப்திகரமாக இருக்காது. அவநம்பிக்கை உங்களை வளரவிடாமல் தடுக்கும். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். தியானம் மேற்கொள்வது நல்லது.

மிதுனம் : இன்றைய நாள் மகிழ்ச்சிக்கான மற்றும் மறக்க முடியாத நினைவுகளை அளிக்கும் நாளாக அமையும். புதிய தொடர்புகள் உருவாக்குவதால் உங்களை மகிழச்செய்யும்.

கடகம் : இன்று உங்கள் செயல்களில் விரைந்து முடிக்க சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம் : இன்றைய நாள் துடிப்பான நாளாக அமையும் . இன்று சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். அதனால் உங்கள் தகுதி உயரும்.

கன்னி : உங்கள் செயல்களில் கவனம் வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இது உகந்த நாள் அல்ல.

துலாம் :  இன்று நாள் சற்று மந்தமாக காணப்படும். இன்று உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது அரிது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி இன்றைய நாளை அனுகூலமாக்கிக் கொள்ளுங்கள்.

தனுசு : இன்று திட்டமிட்டு வேலை செய்வதன் மூலம் வெற்றி காணலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம் : இன்று உங்களை உற்சாகப்படுத்திக்கொள்வதன் மூலம் சோர்வை வென்று நம்பிக்கையுடன் இருக்கலாம்.

கும்பம் : இன்று உங்கள் பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும். இன்றைய விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது.

மீனம் : மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கையில் சாதாரணமான அணுகுமுறை வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்