உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு அழகாகவும் வசீகரமாக மாறவும் இயற்கையான வழிமுறைகள் இதோ !!!!..
முகத்தில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் உதடும் ஒன்றாகும் .அதனை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.குடல் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும்.மேலும் சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
உதடு காய்ந்தால் அதனை எச்சில் தொட்டு தடவ கூடாது.அவ்வாறு செய்யும் போது பாக்டீரியாவினால் பாதிப்பு ஏற்பட்டு புண்கள் உருவாகும்.அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் உதட்டின் மேல் படுமாறு குடிக்க வேண்டும்.அவ்வாறு குடிப்பதால் உதடு வறட்சி அடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.
ஜாதிக்காய் :
உதட்டில் வறட்சி ஏற்படும் போது சிறிதளவு மரச்செக்கு தேங்காய் எண்ணெயுடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து உதட்டின் மேல் பூச வேண்டும்.குறிப்பாக மற்ற இரசாயனம் கலந்த தேங்காய் எண்ணெய்யை பூச கூடாது.இவ்வாறு பூசும் போது உதடு செக்க செவப்பாக மாறும்.
கொத்தமல்லி :
இரவில் தூங்க போவதற்கு முன்பு சிறிதளவு கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து உதட்டின் மேல் பூச வேண்டும்.அவ்வாறு செய்தால் உதட்டில் உள்ள கருமை நீங்கி உதடு சிவப்பாக மாறும் மேலும் மென்மையாகும்.
நெல்லிக்காய் சாறு :
உதட்டில் உள்ள கருமை மாற சிறிதளவு பாலில் பெரிய நெல்லிக்காய் சாறு 5 சொட்டு விட்டு அதனை உதட்டின் மேல் பூசி வந்தால் உதட்டில் உள்ள கருமைநிறம் மாறும் .