காளானிலுள்ள மருத்துவ பயன்கள் இதோ!

Default Image

காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.

காளான்களின் மருத்துவ குணங்கள்:

இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இது உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். பெண்களுக்கு உருவாகும் கருப்பை நோய்கள் மற்றும் மலட்டு தன்மையை போக்குகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த காளானில், தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை உள்ளது. பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்