கணினியை பாதுகாக்கும் சிறந்த 5 அண்டிவைரஸ்கள் இதோ..!
ஆண்டிவைரஸ்களையும் மேம்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளன, காரணம் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்றவற்றை தடுக்கத்தான். புதிதுபுதிதாக வைரஸ்களை கண்டறியும் தொழில்நுட்பமும், இது போன்ற டிஜிட்டல் பயமுறுத்துதலை கண்டறியும் தொழில்நுட்பமும் சேர்ந்து கொண்டே உள்ளன.
மால்வேர்கள் புதுபுது வடிவில் வந்துகொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலான ஆண்டிவைரஸ்கள் ஏற்கனவே உள்ள கண்டறிவதோடு மட்டுமில்லாமல் புதிதாக எந்த வைரஸோ மால்வேரோ தாக்கிவிடாதபடி கணிணியை எப்படியாவது பாதுகாக்கின்றன. இந்த ஆண்டிவைரஸ்கள் கணிணியை பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது.
சில பிரபலமான ஆண்டிவைரஸ்கள் கீழ்வருமாறு.
1. நார்டன் ஆண்டிவைரஸ்
2.மேக்ஏப்ரீ வைரஸ் ஸ்கேன் ப்ளஸ்
3.என்.ஓ.டி. 32
4.டிரண்ட் மைக்ரோ இன்டர்நெட் செக்யூரிட்டி
5.பிட் டிபென்டர்
இந்த ஆண்டிவைரஸ் தரவுதளங்கள் முழுவதும் தீங்குவிளைவிக்கக்கூடிய வைரஸ்கள் வெளிப்படுத்தும் கீ சிக்நேச்சர்கள் நிரம்பி உள்ளன. ஸ்கேன் செய்யும் போது இந்த சிக்நேச்சர்களை பயன்படுத்தி வைரஸ்களை கண்டறியமுடியும். மேலும் இவை செயல்படும் வழிமுறைகள் மற்றும் இவை எப்படி கணிணியுடன் தொடர்ப்பு கொள்கின்றன என்னும் தகவல்களையும் பயன்படுத்தும். ஏதேனும் வித்தியாசயாக தெரிந்தால் உடனே அந்த செயலி அல்லது கோப்புகளை பற்றி எச்சரிக்கை செய்யும். தொடர்ந்து உங்கள் கணிணியை கண்காணித்து வருவதன் மூலம் இது போன்ற தீங்குவிளைவிக்கக்கூடிய வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
மூன்று விதமான ஸ்கேன்கள் பின்வருமாறு.
1) முழு ஸ்கேன்
2) விருப்ப ஸ்கேன்
3) விரைவு ஸ்கேன்
இந்த மூன்று வித ஸ்கேன்களை பற்றியும் இப்போது விரிவாக காண்போம்.
முழு ஸ்கேன் (Full Scan) உங்கள் கணிணியில் ஏராளமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதால், முழு ஸ்கேனை செய்து முடிக்க சில மணி நேரங்கள் ஆகும். முழு ஸ்கேனை நாம் கணிணியில் செய்யும் போது பின்வருவனவற்றை அது ஸ்கேன் செய்யும்.
° அனைத்து நெட்வொர்க் டிரைவ்கள், ஹார்ட் டிரைவ் மற்றும் கழற்றக்கூடிய சேமிப்புகலன்கள்
°சிஸ்டம்மெமரி
°சிஸ்டம் பேக்அப்
°ஸ்டார்ட்அப் போல்டர்
°ரிஜிஸ்டரி ஐட்டம்ஸ்
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை முழு ஸ்கேனை செய்து வந்தால், கணிணியை பாதுகாக்கலாம்.
விருப்ப ஸ்கேன் (custom scan) உங்களிடம் பென்டிரைவ் அல்லது ஹார்ட்டிரைவ் இருந்தால், அதை ஸ்கேன் செய்ய முழு ஸ்கேனை பயன்படுத்தி பலமணிநேரம் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த விருப்ப ஸ்கேன் மூலம், ஸ்கேன் செய்வதற்கு முன்பே எவற்றை ஸ்கேன் செய்யவேண்டும் எதை தவிர்க்கலாம் என்பதை தேர்வு செய்யலாம். இம்முறையை பயன்படுத்துவதன் மூலம், உங்களிடம் இருக்கும் பெரிய ஹார்ட் டிரைவை ஸ்கேன் செய்யும நேரத்தை சேமிக்கலாம். விருப்ப ஸ்கேன் என்பது பென்டிரைவ் மற்றும் ஹார்ட்டிரைவை ஸ்கேன் செய்ய சிறந்த வழி ஆகும்.
விரைவு ஸ்கேன் ( Quick scan) விரைவு ஸ்கேனின் நோக்கம் முழு கணிணியையும் ஸ்கேன் செய்வது தான் என்றாலும், அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. இதில் கீழ்கண்டவை ஸ்கேன் செய்யப்படுகின்றன.
° பொதுவாக பாதிக்கப்படும் பைல் மற்றும் போல்டர்கள்
°தற்சமயம் செயல்பட்டு கொண்டிருக்கும் செயலிகள்
°சிஸ்டம் மெமரி
°ஸ்டார்ட்அப் போல்டர்
°ரெஜிஸ்டரி ஐட்டம்.