எல்லோருமே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்திற்காகவும் வேலையை பார்த்து செல்லக்கூடிய நபர்களுக்கு காலப்போக்கில் அவர்களை அறியாமலேயே உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் தற்போது பலருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீரிழிவு பிரச்சனை இருந்தால் உணவு வகைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமல்லாமல் மருந்துகளும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
கணையம் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்வது தான் நீரிழிவு நோய்க்கான காரணம். இதற்காக மருத்துவர்களை நாடி பணத்தை விரயம் செய்தும் பலன் கிடைக்காத பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து வருகின்றனர். ஆனால் ஆரோக்கியமான முறையில் வீட்டில் செய்யக்கூடிய சில வழிமுறைகள் மூலமாகவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மனிதர்கள் அனைவருக்குமே தூக்கம் முக்கியமான ஒன்று தான். ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு தூக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என நினைப்பவர்களும் முறையாக தூங்க வேண்டும். முறையான தூக்கம் இல்லாததால் உடல் எடையும் அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முறையான தூக்கம் அவசியம்.
நீரிழிவு பிரச்சினை இருந்து விடுபடுவதற்கான ஒரு சிறந்த வழி மன அழுத்தம் இல்லாமல் இருப்பது தான். மன அழுத்தம் அனைவருக்குமே சில சமயங்களில் ஏற்படக்கூடியது தான். ஆனால் இந்த மன அழுத்தம் நீரிழிவு நோய் உள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்.
இதன் காரணமாக உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்க தொடங்கும். எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு தினசரி யோகா அல்லது உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இதுவும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நீரிழிவில் இருந்து விடுபடவும் உதவும்.
சர்க்கரை அளவை இயற்கையாக கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கான ஒரு இயற்கை மூலம் தான் தண்ணீர். ஒரு ஆய்வின் படி சரியான அளவு தண்ணீர் உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான அபாயம் மிக குறைவு என கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தண்ணீரை அதிக அளவு முறையான சமயத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
நோயாளிகள் தினசரி போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுவும் செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்துள்ள நீரை குடிப்பது மிகவும் நல்லதாம். இந்த முறைப்படி செப்பு பாத்திரத்தில் இரவு தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை காலை எழுந்ததும் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்து வரும் பொழுது நீரிழிவு பிரச்சினை கட்டுப்படுத்தப்படும். மற்ற பிற நோய்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளலாம். இதன் காரணமாக நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படும்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…