ஒரே இரவில் நீங்க கலரா ஆகணுமா இதோ இயற்கை வழிமுறைகள் !!!!!!!
முகத்தில் கருமை நிறம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால் அதிக அளவு வெயிலில் நாம் செல்வதால் முகம் அதிக அளவில் வெப்பமடைந்து கருமையாகிறது .மேலும் அதிக அளவு கருத்தடை மாத்திரை பயன்படுத்தி வந்தாலும் முகம் கருமை அடையும் அதை தீர்பதற்க்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
தேன் -1/2 தேக்கரண்டி
முல்தானிமட்டி-2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு -1தேக்கரண்டி
செய்முறை :
முல்தானி மெட்டியை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதை 10 நிமிடம் சிறிதளவு நீர் ஊற்றி ஊற விட வேண்டும் .தேன்,எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் சேர்த்து கலந்து முகத்திற்கு பூச வேண்டும்.பின்பு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி முகத்தை துணியால் துடைக்க வேண்டும் .
பயன்கள்:
தேன் இது மிக சிறந்த கிருமிநாசினி யாகும் .தோல் சுருக்கம் வராமல் பாதுகாக்கும்.முல்தானி மட்டி இது தோலில் ஏற்படும் சுருக்கம், கருமை நிற திட்டுகள், மங்கு ஆகிய வரை குண படுத்தும் .முகத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கும் என்பதால் தன நாம் முல்தானிமட்டியை பயன்படுத்துகிறோம். எலுமிச்சை சாறு முகத்தில் ஏற்படக்கூடிய கருண் திட்டுகளை குணப்படுத்தும்.இதில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் கிருமி நாசினியாக செயல்படுகிறது.இது மேலும் முகத்தில் ஏற்படும் எரிச்சல் ,அரிப்புகளை குணப்படுத்தும் .