இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கான இயற்கை வழிமுறைகள் சிலவற்றை நாம் இன்று அறிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது வழக்கம்தான். இந்த ரத்த சர்க்கரையின் அளவை எவ்வாறு குறைப்பது என்று தெரியாமல் ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு நாளடைவில் அதன் மூலமாகவே மாற்று நோய்களையும் தேடி வைக்க கூடிய நிலை தற்பொழுது உருவாகிவிடுகிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது, போதுமான தண்ணீர் குடிக்காதது ஆகியவைதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க காரணம் ஆகிறது. எனவே உடலில் ரத்தத்தில் இருந்து சர்க்கரையை உயிரணுக்களுக்கு சரியாக கொண்டு செல்ல முடியாத போதுதான் உயர் ரத்த சர்க்கரையாக மாறுகிறது. இதுதான் நீரழிவு நோய்க்கும் வழிவகுக்கிறது.
இந்நிலையில் நாம் இந்த ரத்த சர்க்கரை நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள், முதலாவது போதுமான தண்ணீர் குடித்து நன்றாக தூங்கி எழுந்து, காலை உணவை சரிவர உட்கொண்டால் இரத்த சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுபோல தினமும் நடைப்பயிற்சி, ரன்னிங் மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் இரத்த சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு வழி வகுக்கும். மேலும் ஆரோக்கியமான எடையை பராமரித்து, முறையான உணவு பழக்கங்கள் வரவேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து அதிகம் நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகள் சாப்பிடுவதை அதிகரிக்கவேண்டும்.
ஒரு கிராம் அளவில் லவங்கப்பட்டை எடுத்துக்கொண்டு அதை உட்கொண்டு வரும் பொழுது இரத்த சர்க்கரை அளவு குறையும். முருங்கை இலைகளில் உள்ள நார்ச்சத்து காரணமாக ரத்த சர்க்கரை குறையும். எனவே அவித்தோ அல்லது உணவில் சேர்த்து நாம் முருங்கை இலைகளை சாப்பிடலாம். மேலும் நாவல் பழ விதைகள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் பங்காற்றுகிறது. மேலும் பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம், இதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படுகிறது. வேப்பங்கொழுந்து, கருஞ்சீரகம் ஆகியவையும் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…