உடலில் ஹுமோகுளோபின் அளவை சரி செய்ய எளிய வழிமுறைகள் இதோ !!!!!!

Default Image

உடலில் இரத்த அளவை அதிகப்படுத்துவதற்கான வழி முறைகள் :

உடலில் ஹுமோகுளோபின் குறைந்தால் தலைசுற்றல் ,தலை வலி,சோர்வு முதலிய நோய்கள் ஏற்படுகிறது .இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால் உடலில் இரும்புச்சத்து ,வைட்டமின் சி குறைவதால்  ஏற்படுகிறது.

இதனை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அதிகமாக  காய்கறிகள் ,பழங்கள் ,கீரை வகைகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

Image result for உடலில் ஹுமோகுளோபின்

மாதவிடாய் காலங்களிலும் இரத்தம் அதிக அளவில் தேவைபடுவதால் நாம் இந்த நேரங்களில் அதிகம் பீட்ருட் ,மாதுளை ,ஆப்பிள் ,தர்பூசணி,கொய்யா ,திராட்சை ,ஆரஞ்சு ,வாழைப்பழம் ஆகிய பழங்களை  அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

மேலும் கடல்  மீன்வகைகளை உணவாக சாப்பிட வேண்டும் .மேலும் முட்டை ,வேர்க்கடலை ,சுண்டல் ,சிறுதானியங்கள் முதலியவற்றை  சாப்பிட வேண்டும்.காபி ,டீ கோலா ,பீர் ,ஆல்கஹால் உட்கொள்ளுதல்  முதலிய பழக்கங்களை விட்டு விட  வேண்டும்.மேலும் பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும் இதில் வைட்டமின் பி,வைட்டமின் சி, முதலிய சத்துக்கள் மற்றும் இரும்பு சத்து முதலியவை இருக்கிறது.

வாழைப்பழம் இதில் பொட்டாசியம் சத்து அதிகம் காணப்படுகிறது .இதனால் தினம்  ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.உலர்ந்த திராட்சைகளை சாப்பிட வேண்டும் .உலர்ந்த திராட்சைகளை சாப்பிடுவதால் அதில் பொட்டாசியம் ,கால்சியம் ,இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது.

Image result for உலர்ந்த திராட்சை

மேலும் உடலில் இரத்த அளவை  அதிகரிக்க எலுமிச்சைசாற்றுடன் தேன்  சேர்த்து சாப்பிட்டால் உடலில் இரத்த அளவு அதிகரிக்கும் .அடுத்ததாக ஆட்டு ஈரல் இதில் வைட்டமின் பி,கால்சியம் ,பொட்டாசியம்,பாஸ்பரஸ்,இருப்புச்சத்து  முதலிய சத்துக்கள் உள்ளது .

ஸ்ட்ரா பெர்ரி  இதில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது.உடலின் இரத்த அளவை  அதிகரிக்க மேற்கண்ட  வழிமுறைகளை பயன்படுத்தினால் ஹீமோகுளோபின் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
seizure (1)
puducherry school rain holiday
Minister Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin