ஜெட் வேகத்தில் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வந்துள்ளது AI (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பம் , சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பல்வேறு செய்திகள், வதந்திகள், வேலை குறித்த ஆய்வுகள் என தொழில்நுட்ப உலகமே பரபரப்பாக இயங்கி வருகிறது.
இது இந்த தொழில்நுட்ப மாற்றம் என்பது AI வந்ததால் மட்டும் நிகழவில்லை. இது அவ்வப்போது, புதிய புதிய தொழில்நுட்பம் உருவாகும் போது, தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி பாதையை கணித்துக்கொண்டு அதனை நோக்கி தங்களை நகர்த்தி கொண்டவர்கள் பிழைத்து விடுவர். புதிய தொழில்நுட்பத்தை மிரட்சியுடன் பார்த்து இருப்பவர்கள் பின்தங்கி விடுகின்றனர். இது வழக்கமான தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றமே என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செல்ல வேண்டிய நேரமிது.
அதற்கேற்றாற் போல, புதிய AI தொழில்நுட்பம் குறித்த புதிய பாடப்பிரிவுகள் தற்போது களமிறங்க துவங்கிவிட்டன. வழக்கம் போல அதற்கான விண்ணை முட்டும் கட்ணங்களும் புதியதாக கற்க விரும்புவார்களா சற்று அதிர வைத்துள்ளன என்றே கூறவேண்டும். இந்த சமயத்தில் தான் புதிய AI தொடர்பாக படிக்க தொழில்நுட்ப சந்தையில் இலவசமாக இருக்கும் 6 முக்கிய AI படிப்புகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள இலவச படிப்பு தான் ஜெனரேட்டிவ் AI ஆகும். இது ஒரு AI-இன் அறிமுக நிலை குறுகிய கால பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. வழக்கமாக பயிற்றுவிக்கப்படும் முறையில் இருந்து இது வேறுபடும் என்றும் புதிய முறையில் இந்த Course கற்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த AI அறிமுக பாடத்தை பயனர்கள் பைத்தான் (Python) மொழியை கொண்டு பயனர்கள் கற்றுக்கொள்ளலாம். பைத்தானுடன் செயற்கை நுண்ணறிவுக்கான CS50 இன் அறிமுகம், நவீன செயற்கை நுண்ணறிவின் (AI) அடிப்படை கருத்துக்கள் மற்றும் அதன் வழிமுறைகளை கற்பிக்கிறது. கேம் உருவாக்கம், கையெழுத்து அங்கீகாரம் மற்றும் இயந்திர மொழிபெயர்ப்பு போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கும் தொழில்நுட்பமும் இதில் கற்பிக்கப்ப்டும்.
மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த AI படிப்பானது AI தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை கற்பிக்கிறது. AI இன் அறிமுகம், அது எவ்வாறு செயல்படுகிறது, அதன் மூலம் நமக்கு தேவையான உள்ளடக்கத்தை உருவாக்கும் வழிகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் பாடப்பிரிவுகளை கொண்டுள்ளது. இந்த பாடத்திட்டமானது முன்னணி AI நிபுணரான Pinar Seyhan Demirdag என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் மொத்தம் 42 நிமிடங்கள் நீளம் கொண்டது.
இந்த பாடபிரிவானது Googleஆல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடிப்படையில் இருந்து கற்பிப்பவர்களுக்கு Responsible AI என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் மற்றும் Google எவ்வாறு Responsible AIஐ அதன் தயாரிப்புகளில் செயல்படுத்துகிறது என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது. இந்த Course முடிந்ததும், பயனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதை பயனர்கள் தங்கள் சுயவிவரங்களில் பதிவேற்றிக்கொள்ள முடியும்.
தினசரிப் பணிகளில் AI எவ்வாறு உதவும் என்பது பற்றிய பாடத்திட்டங்கள், AI பற்றிய பல்வேறு குறிப்புகள் மற்றும் AI இன் மேம்பட்ட பயன்பாடுகள் குறித்த அறிமுகம் ஆகியவை இந்த பாடநெறி கட்டமைப்பில் அடங்கும். இந்த பாடபிரிவானது வணிகத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தை நடத்தும் DeepLearning.AI இன் கூற்றுபடி, அட்டவணையானது மூன்று வார படிப்பு ஆகும், இது ஒவ்வொரு வாரமும் ஒன்று முதல் இரண்டு மணிநேரம் கொண்டுள்ள படிப்பாகும்.
மைக்ரோசாப்ட் வழங்கும் இந்த Course ஆனது, Bing Chat எவ்வாறு பல்வேறு வகையான பணிகளைச் செய்கிறது மற்றும் பணிகளை ஒழுங்குபடுத்தவும், அதற்கான யோசனைகளை உருவாக்கவும் மற்றும் அதன் தரவுகளை சுருக்கவும் உதவுகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் முடிவில் உங்கள் வேலையை தானியங்குபடுத்தவும், முடிவுகளின் உண்மைகளை சரிபார்க்கவும் மற்றும் பல்வேறு சவாலான செயல்களை செய்ய நீங்கள் தயாராக இருப்பீர்கள் என கூறப்படுகிறது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…