முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில இயற்கை வழிமுறைகள் இதோ…!

Default Image

பொதுவாக ஆண்கள், பெண்கள் அனைவருமே முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் எதுவுமின்றி முகம் பளபளப்பாக பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், கோடை காலத்தில் மூக்கின் அருகில் அதிக அளவில் எண்ணெய் தன்மை ஏற்படுவதால் அப்பகுதியில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி, அதன் காரணமாக மூக்கு பகுதி மற்றும் கண்ணங்களில் கரும்புள்ளிகள் உருவாக ஆரம்பிக்கிறது.

எனவே, எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை போக்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பார்கள். மேலும் பலர் இந்த கரும்புள்ளிகளை அகற்றுவதற்கு செயற்கையான கிரீம் உபயோகிப்பார்கள். ஆனால் அவை அனைத்தும் உடனடியாக பலன் கொடுத்தாலும், முழுமையான நிவாரணம் அளிப்பதில்லை. எனவே இன்று நாம் இயற்கையான முறையில் வீட்டிலேயே சில பொருட்களை வைத்து எப்படி கரும்புள்ளிகளை நீக்குவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

1.கடலை மாவு

நன்மைகள் : கடலை மாவு தோல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளிலும் இருந்து நிவாரணம் அளிப்பதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த கடலை மாவை நமது முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்திலுள்ள கறைகள், சுருக்கங்கள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் கடலைமாவு, 2 ஸ்பூன் பால் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும்.

இடைப்பட்ட காலம்: முகத்தில் தடவிய பின்னர் 10 நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்யவும். அதன் பின்பு 10 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு நல்ல தண்ணீரால் முகத்தை கழுவி விடவும். இதை தினமும் பயன்படுத்தலாம்.

2.கற்றாழை ஜெல்

நன்மைகள் : கற்றாழை ஜெல்லில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது. இதை முகத்தில் பயன்படுத்துவதன் மூலமும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற முடியும்.

உபயோகிக்கும் முறை : புதிய கற்றாழை ஜெல் கொஞ்சம் எடுத்து, அதனுடன் மஞ்சள் கலந்து நன்றாக கிளறிவிட்டு, கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி விட வேண்டும்.

இடைப்பட்ட காலம் : இதனை தடவி 15 நிமிடங்களுக்கு பின், சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வரும் பொழுது முகத்திலுள்ள கரும் புள்ளிகள் நீங்க உதவுவதுடன், முகத்திலுள்ள எண்ணெய் தன்மை மாறவும் இது உதவுகிறது.

3.தேன் மற்றும் சர்க்கரை

நன்மைகள் : தேனில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. எனவே, இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுவதுடன், முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கவும் இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து கரும்புள்ளி உள்ள பகுதிகளில் தேய்த்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் இதை தடவி இரண்டு மூன்று நிமிடங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன் பின்பு இவற்றை தண்ணீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு வாரம் இரு முறை செய்யலாம்.

4.இலவங்க பட்டை

நன்மைகள் : இலவங்கப்பட்டையில் அதிக அளவு மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. மேலும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதுடன், இதில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் உள்ளது.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல தயாரித்து இதை முகத்தில் தடவ வேண்டும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் இதை தடவி மசாஜ் செய்து விட்டு அதன் பின் பத்து நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதை வாரம் 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம், இவ்வாறு செய்யும் போது கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.

5.ரோஸ் வாட்டர்

நன்மைகள் : ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருப்பதால் சருமத்தை சுத்திகரிக்க உதவுவதுடன், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும் இது உதவும்.

உபயோகிக்கும் முறை : ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கரும்புள்ளி உள்ள பகுதிகளில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

இடைப்பட்ட காலம் : இதை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து விட்டு, ஐந்து நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல், முகத்துக்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.

6.பேக்கிங் சோடா

நன்மைகள் : பேக்கிங் சோடா பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. இதை உபயோகிக்கும் பொழுது முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது.

உபயோகிக்கும் முறை : பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவ வேண்டும்.

இடைப்பட்ட காலம் : முகத்தில் இதை தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். கரும்புள்ளி உள்ளவர்கள் இதை தினமும் முகத்தில் பயன்படுத்தலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்