கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் ஒன்றாக இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை சமந்தா அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என சமந்தா தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்றும், அதற்கான படப்பிடிப்பை தொடங்க மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தன்னுடைய பங்கு படத்திற்கு வலுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…