சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவன் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன்!

சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னதிரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத், டிசம்பர் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால் சித்ராவின் கணவர் ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனைதொடர்ந்து 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேம்நாத் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025