சல்மான்கான் மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையை தவிர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் மும்பை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளிகளுக்கும் உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் மும்பையில் உள்ள காவல்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு சானிடைசர்களை வழங்கி உதவியுள்ளார். தங்களுடைய உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு தனது சொந்த நிறுவனமான ஃப்ரெஷ் நிறுவனம் மூலம் தயாரித்த ஒரு லட்சம் சானிடைசர்களை கொடுத்து உதவியுள்ளார்.தற்போது சல்மான் கானின் இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே சல்மான் கான் பாலிவுட்டில் பணிபுரியும் 5 லட்சம் உறுப்பினர்களில் 25 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் ரூ. 3, 000 வீதம் செலுத்தி உதவியதோடு, மும்பையில் உள்ள 25ஆயிரம் ஏழை மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி உதவியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…