வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ராவ் தன்னை வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கைக்கு அழைத்தாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை உட்பட செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளவர் அதிதிராவ். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘சுஃபியும் சுஜாதயும் ‘என்ற மலையாள திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், துக்ளக் தர்பார், ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இவர் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்தும், மீ டூவில் புகார் செய்யும் நடிகைகளை குறித்தும் கூறியுள்ளார்.
அதில் திரையுலகில் ஒவ்வொருவரும் பிரச்சினைகளையும், மிரட்டல்களையும் எதிர் கொள்கின்றனர். சிலர் தப்பியும், அப்பாவி நடிகைகள் சிலர் சிக்கியும் கொள்கிறார். எனது அதிர்ஷ்டம், நான் சிக்காமல் தப்பித்து விட்டேன். மேலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கூறிய அவர்,நான் சினிமாவில் அறிமுகமான நேரத்தில் வாரிசு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமாவில் வாய்ப்பு என்றும், இல்லையென்றால் சினிமா கனவை மறந்து விடு என்று கூறியதாகவும், ஆனால் நான் அதற்கு ஒப்பு கொள்ளமால் வேறு படத்தில் அறிமுகமாகினேன் என்று தெரிவித்துள்ளார். நான் நடித்த படங்களை பார்த்தவர்கள் சிறப்பாக நடித்தாய் என்று கூறி விட்டு விடுவார்கள். இதுவே வாரிசு நடிகர் படம் என்றால் உங்கள் நடிப்பு சினிமா சரித்திரத்திலையே சிறந்த நடிப்பு என்று கூறி புகழ்வார்கள் என்று தெரிவித்துள்ளார்
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…