பாகிஸ்தானில் கனமழையால் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.!

Default Image

பாகிஸ்தானில் கனமழை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கூரை இடிந்து விழுந்த சம்பவங்களால் பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது.

லாகூரின் ஹர்பன்ஸ்புரா பகுதியில் ஒரு பழைய வீட்டின் கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்து, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்தபோது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மண்டி பஹாவுதீன் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் தாய் உள்ளிட்ட 4 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சக்வால் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர்.

மேலும், பைசலாபாத் மாவட்டத்தில் மின்சாரம் மற்றும் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த வார தொடக்கத்தில், பாகிஸ்தான் வானிலை ஆய்வு துறை புதன்கிழமை முதல் வலுவான பருவமழை நீடிக்கும் என்று கூறியது, இது அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் அந்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்றும் கனமழை பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்