கனமழை ..! நிலச்சரிவால் 7 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழப்பு ..!
கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உகாண்டா எல்லையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் உகாண்டா பகுதியில் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் பல சேதமடைந்தன.
இந்த நிலச்சரிவில் சிக்கி 7 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த நிலச்சரிவில் காணாமல் போன 7 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து வடக்கு மாகாண கவர்னர் ஜான் க்ராப் கூறுகையில் , நேற்று இரவு நடந்ததை போன்ற அவலங்களை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை ” என கூறினார்.
காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நிலச்சரிவில் பலர் சிக்கியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழக்கும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.