நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்..!

Default Image

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா என்ற வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த திரைப்படம் ரூ.2.5கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற கண்ணுங்களா செல்லங்களா என்ற வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்