மாரடைப்பு எச்சரிக்கை : இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள் ….!

தற்போதைய காலகட்டத்தில் மாரடைப்பு ஒரு சாதாரணமான நோயாக மாறிவிட்டது. மாரடைப்பால் தினமும் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? கடந்த 2 வருடத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு காரணம் புகைபிடித்தல் பழக்கமும், மன அழுத்தமும் தான் என கூறப்படுகிறது.
மேலும், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. நமது இதயத்தில் இருந்து இரத்தம் சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஏதேனும் தளர்வுகள் ஏற்படும் பொழுது, ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இதன் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் செயல் இழக்க ஆரம்பிப்பது மட்டுமல்லாமல், மாரடைப்பு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்து விடும்.
இது போல இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் செல்லக் கூடிய பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்படும் பட்சத்தில், சட்டென்று ஒருவருக்கு மாரடைப்பு உண்டாகி உயிர் இழப்பை ஏற்படுத்திவிடும். இந்த மாரடைப்பு ஏற்படுவதற்கான சில அறிகுறிகள் நமக்கு தெரியும், ஆனால் இன்று நாம் அறியாத சில மாரடைப்பு அறிகுறிகளை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மார்பு வலி
பெரும்பாலும் மாரடைப்பிற்கான முக்கியமான அறிகுறி மார்பு பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் மற்றும் வலி உணர்வு தான். அதிக அளவிலான நெஞ்சு வலியை உணரும் பட்சத்தில், அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதே போல இந்த வலி நமது கை, கழுத்து, முதுகு ஆகியவற்றிலும் பரவ தொடங்கும். இவ்வாறு அறிகுறிகள் தென்படும் பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இவை சில நிமிடங்களிலேயே மாரடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை உருவாக்கிவிடும்.
சோர்வு
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பதாக சில நாட்களுக்கு உடலில் மிக அதிக அளவில் சோர்வு இருக்கும். நன்றாக தூங்கி எழுந்து அமர்ந்து இருக்கும் பொழுது கூட ஒரு புத்துணர்ச்சி இல்லாமல், உடல் சோர்ந்த நிலையிலேயே காணப்படும். இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரு அறிகுறி. ஏனென்றால் இதயம் சரியாக வேலை செய்யாத பட்சத்தில், நமது உடல் உள்ளுறுப்புகள் மிகக் கடினமான வேலையை செய்து சோர்வாகி விடும். எனவே, அதிக அளவிலான சோர்வை தொடர்ந்து அனுபவிப்பவர்கள் நிச்சயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
தலைச்சுற்றல் மற்றும் வாந்தி
தொடர்ச்சியாக தலைச்சுற்றல் மற்றும் வாந்தி எடுத்தல் போன்ற உணர்வு மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். நமது இதயம் பலவீனம் அடையும் பொழுது நமது இரத்த ஓட்டமும் சரியாக இருக்காது. எனவே இந்த சூழ்நிலையில் நமது மூளைக்கு ஆக்சிஜன் சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவதன் காரணமாக தலைசுற்றல் மற்றும் தலை பாரம் ஏற்படும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
மூச்சுத்திணறல்
வித்தியாசமாக மூச்சு திணறுவது போல உணர்ந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் தனது வேலையை சரியாக செய்ய முடியாத போது, நுரையீரலுக்கு சரியான அளவு ஆக்சிஜன் சென்றடையாது. இதன் காரணமாக நமக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். எனவே மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.
லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025