உடற்பயிற்சி செய்தவுடன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

Default Image

எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் அதற்கான பலன்கள் சிலருக்கு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டு வருகின்றனர். அதற்க்கு காரணம் அவர்கள் உணவு பழக்க வழக்கத்தில் உள்ள சிறிய தவறுதான் காரணம்.
முக்கியமாக உடற்பயிற்சி செய்தபின் நாம் சில உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் அது நாம் உடற்பயிற்சி செய்ததற்க்கு அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும். சில உணவுகள் நம் உடல்நலனையே கெடுத்துவிடும்.
அதில் முதலில் இருப்பது பாலாடை கட்டி எனப்படும் சீஸ் உணவுவகைகள். அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளதால் உடற்பயிற்சி செய்த பின் இதனை சாப்பிடக்கூடாது.
இரண்டாவதாக பச்சை காய்கறிகள். ஆம் வேகவைத்த காய்கறிகளை வேண்டுமானால் சாப்பிடலாம் பச்சை காய்கறிகளை உடற்பயிற்சி முடிந்ததும் சாப்பிடக்கூடாது.
அடுத்து, முட்டை, ஆச்சர்யபட வேண்டாம். அவித்த முட்டை, பச்சை முட்டை சாப்பிடலாம். பொரித்த முட்டை சாப்பிட கூடாது.
அடுத்து, பழச்சாறு. அது எந்த பழமாக இருந்தாலும் அதில் சர்க்கரை இருபப்தால், உடற்பயிற்சி செய்ததும் பழசாறு குடிக்கும் போது, அது உடனே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
ஐந்தாவது, மில்க் ஷேக் என்பதும் பால் மற்றும் பழச்சாறு ஐஸ்க்ரீம் கலந்த கலவையை எடுத்துக்கொள்ள கூடாது. இதன் மூலமும் நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
ஆறாவது, மைதாவால் செய்யப்பட்ட பிரட் வகைகள். உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட்டால் இது மிகவும் ஆபத்து.
ஏழாவது, பதப்படுத்தப்பட்ட இறைச்சி. உடற்பயிற்சி செய்தவுடன் இதனை சாப்பிடவே கூடாது.
இவைகளை தவிர்த்து உடற்பயிற்சி செய்தவுடன் தண்ணீர் அல்லது இளநீர் போன்றவை குடிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்