தேர்வு எழுதப்போகும் உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க இந்த பழத்தை சாப்பிடச்சொல்லுங்கள்…

Default Image
சீதா பழமரம் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பவுண்டு  பழங்களை  ஈனக்கூடியது. இதன் காய்கள் மரத்தில் பழுக்காது  என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். இந்த சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி அதாவது கால்சிபோரால் எனும்  கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. மேலும், இதில் நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம்,  கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து,போன்றவை இந்த பழத்தில் நிறைந்துள்ளது.. சீதாப்பழ மரத்தின் இலைகள் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும்  கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது. சீத்தாபழத்திற்க்கு  மனித உடலை வலிமையாக்கும் சக்தி உள்ளது. இது இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். மேலும், நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். இதில் காணப்படும் கால்சியம் சத்து , எலும்பு, பற்கள் பலமடையும்.  குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும். இதனை தொடர்ந்து உட்கொண்டால்  மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன்,  நினைவாற்றல் அதிகரிக்கும். இதனால் தேர்வு எழுதப்போகிம் மாணவர்கள் சீத்தா பழம் சாப்பிடுவது இந்த சமயத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்