பிரான்சில் மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனம்!

Default Image

பிரான்சில் மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸானது, மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு மீண்டும் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வசதியாக அவசரநிலை தேவைப்படுவதாக  கூறியுள்ளார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு  மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சி வாயிலாக மக்களுடன் உரையாற்றிய எம்மானுவேல் மேக்ரோன், சனிக்கிழமை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஊரடங்கின் போது மக்கள் உணவகங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்,  ஆனால், பொது போக்குவரத்திற்கு தடை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரான்சில் இதற்குமுன் மார்ச் மாதம் அவசரநிலை பிரகடப்படுத்தப்பட்டு, ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்