ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துபவரா நீங்கள்..! இதனால் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றி தெரியுமா..?
குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் என்றால் அலாதி பிரியம். பலவித விளையாட்டு பொருட்கள் குழந்தைகளை சுற்றி இருந்தாலும், புதிது புதிதாக வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு திருப்தி அடையும். இந்த வரிசையில் இன்றுள்ள இளைஞர்கள் மற்றும் பெரியவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.
இது பார்க்க சற்று வித்தியாசமாக இருந்தாலும், இதனால் அவர்கள் அடையும் பயன் ஏராளம். இதை பற்றி நடத்திய தற்போதைய ஆய்வில் இந்த தகவல் வெளி வந்துள்ளது. ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துவதால் என்ன விதமான பயன்கள் கிடைக்கும் என்பதை இனி அறியலாம்.
ஃபிட்ஜெட் ஸ்பின்னர்
இந்த விளையாட்டு பொருளை முதன்முதலில் கேத்தரின் ஹெட்டிங்கர் என்பவர் தான் வடிவமைத்தார். 3 சுழலும் சிறு சிறு இறக்கையுடன் இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரின் அமைப்பு இருக்கும். இதை நடுப்பகுதியை பிடித்து கொண்டு சுழல விடவும். இப்படி இதை சுற்றுவதால் பலவித மாற்றங்கள் உடலுக்கு உண்டாகும் என ஆய்வுகள் சொல்கின்றன.
சோர்வான நேரங்களில்…
பலரும் மிகவும் சோர்வான நேரங்களில் தான் இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரை பயன்படுத்துவார்கள். இதை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மூளையின் செயல்திறன் அதி வேகமாக இருக்கும். ஆனால், இதை தொடர்ந்து பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு சில பாதிப்பு உண்டாகும்.
புத்தி கூர்மை
ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரை பயன்படுத்துவதால் புத்தி கூர்மை அதிகரிக்கும். மன அழுத்தம் கொண்டோர் இதை பயன்படுத்துவதால் சட்டென மன அழுத்தம் குறைந்து விடும். இதனால், எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ஆரோக்கியமான மன நிலையில் இருப்பீர்கள்.
மூளை திறன்
மூளையின் திறனை அதிகரிக்க வேண்டும் என விரும்பினால் மிக எளிதில் இதை வைத்து செய்து விடலாம். அதற்கு நீங்கள் அதிக வேலை பளுவில் இருக்கும் போது இந்த ஃபிட்ஜெட் ஸ்பின்னரை பயன்படுத்தலாம். இது மூளைக்கு சீரான இரத்த ஓட்டத்தை தரும்.
இரத்த ஓட்டம்
மூளையின் இரத்தத்தை ஒட்டத்தை சீராக வைப்பதுடன் கால்களுக்கும் நல்ல இரத்த ஓட்டத்தை தரும். கூடவே உடலில் உள்ள கலோரிகளையும் இது குறைக்க வழி செய்யும். ஆதலால் ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்துவோருக்கு சீரான உடல் நிலை உண்டாகும்.