காலையில் வெறும் வயிற்றில் துளசி நீரை 1 கிளாஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தயாரிப்பு முறை?
துளசி- பலவித மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடியாகும். கோவில்களில், வீடுகளில் சிறப்பான பூஜைகளில், துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சில வீடுகளின் முற்றத்தில் இன்றும் இந்த துளசி செடிதான் நம்மை வரவேற்கும். பல காலமாக துளசியை மருத்துவ பயன்பாட்டிற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இவ்வளவு மகிமை பெற்ற துளசி நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலுக்கு பல்வேறு சிறப்பான மாற்றங்கள் உண்டாகும். இந்த பதிவில் துளசி நீரினால் உண்டாகும் நன்மைகளை விரிவாக தெரிந்து கொள்வோம்.
எதிர்ப்பு சக்தி மண்டலம்
துளசியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தன்மை உடலில் கிருமிகளை சேர விடாது. அதே போன்று அன்றாடம் இந்த நீரை குடித்து வருவதன் மூலமாக நோய்களின் தாக்கம் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம்.
கல்லீரல்
துளசி எப்படி இவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அதே போன்று இதை சாப்பிடுவோரையும் தூய்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டுள்ளது. துளசி நீரை குடித்தால் கல்லீரலில் சேர்ந்துள்ள அழுக்குகள் முழுவதுமாக வெளியேறி விடும். மேலும் கல்லீரல் நோய்களில் இருந்து காக்கும்.
நோய்கள்
சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற அபாய நோய்களை விரட்ட துளசி நீர் சிறந்த வழியாகும். துளசி நீர் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். கூடவே புற்றுநோய் அபாயமும் இதனால் தடுக்கப்படும்.
சிறுநீரகம்
துளசி நீரை குடித்து வருவதன் மூலமாக சிறுநீரகத்தில் உருவாக கூடிய கற்களை எளிதில் கரைத்து விடலாம். அத்துடன் சிறுநீரக கற்கள் இனி உருவாகாதவறு இந்த நீர் பார்த்து கொள்ளும்.
சளி, இரும்பல்
சளி, இரும்பலால் அவதிப்படுவோருக்கு இந்த துளசி நீர் அருமருந்தாக செயல்படும். இந்த துளசி நீரை தொடர்ந்து குடித்து வந்தாலோ அல்லது வாய் கொப்பளித்தாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
தயாரிக்கும் முறை
1 கைப்பிடி துளசியை எடுத்து கொண்டு அதை 2 லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில் இந்த நீரை வெறும் வயிற்றில் 1 கிளாஸ் அளவு குடித்து வரலாம். இதனை அன்றாடம் செய்து வந்தால் மேற்சொன்ன பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.