உணவில் கிராம்பு சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
மசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும்.
கிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை இனி அறியலாம்.
புற்றுநோய் செல்கள்
உணவில் கிராம்பு சேர்ப்பதால் புற்றுநோயின் அபாயம் குறையுமாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் கட்டிகளை உடலில் உருவாக்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். குறிப்பாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு மிக குறைவாம்.
வீக்கங்கள்
உடலின் உட்பகுதியிலோ அல்லது வெளி பகுதியிலோ வீக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க கூடிய ஆற்றல் கிராம்பிற்கு உள்ளது. கிராம்பு எண்ணெய்யை உடலின் வெளி பகுதியில் வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவிலே வீக்கம் குறையும்.
பருக்கள்
முகத்தில் பருக்கள் ஏற்பட்டால் அதை மிக எளிதில் போக்குவதற்கு கிராம்பு உதவும். கிராம்பை பொடி போன்று தயாரித்து அதனை தேனுடன் கலந்து தடவினால் பருக்கள் நீங்கும். அல்லது கிராம்பு எண்ணெய்யை இதற்கு பயன்படுத்தலாம்.
வயிற்று புண்
கிராம்பை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண்கள் குணமாகும். மேலும், செரிமான கோளாறுகள் இதனால் விலகும். அத்துடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளும்.
சுவாச கோளாறுகள்
மனிதன் வாழ்வதற்கு முக்கியமான காற்றை சுவாசிக்க நுரையீரல் மிக அவசியம். நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் உயிரை பறிகொடுக்க வேண்டியது தான். கிராம்பை உணவில் சேர்ப்பதன் மூலம் சுவாச கோளாறுகள் தடுக்கப்படுகிறது. மேலும், தொண்டை பிரச்சினை, ஆஸ்துமா முதலியவற்றை குணப்படுத்தும்.
பற்கள்
நமது புன்னகையை வெளிப்படுத்தும் பற்களை ஆரோக்கியமாக வைப்பது நம் கடமை. பற்களில் ஏதேனும் பாதிப்பு உண்டாகினால் அதையும் கிராம்பை கொண்டு குணப்படுத்த இயலும். பல் வலி, பல் சொத்தை போன்ற பிரச்சினைகளுக்கு இது அருமருந்தாக செயல்படும்.