சங்கு பூ டீ குடித்தால் நோய்கள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்..! தயாரிப்பு முறை உள்ளே..!
பலருடைய வீட்டில் இருக்க கூடிய இந்த செடியின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை. இந்த செடி பல்லாயிரம் வருடமாக மருத்துவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் சித்தர்கள் இந்த செடியின் மகிமையை பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சங்கு பூ நமக்கு உதவும் தன்மை கொண்டது. இனி சங்கு பூவின் முழு பயனையும், சங்கு பூ டீயை எவ்வாறு தயாரிப்பது என்பதையும் நாம் அறிவோம்.
எதிர்ப்பு சக்தி
இந்த நீல நிற பூவில் பல வித மகத்துவங்கள் உள்ளன. சாதாரண பூவாக நாம் கருதும் இதில் நோய்களை எதிர்க்கும் தன்மை நிரம்பி உள்ளது. உடலில் இருக்க கூடிய நோய் கிருமிகளை அழிக்கும் தன்மை சங்கு பூவில் உள்ளது என இன்றைய நவீன மருத்துவமும் கூறியுள்ளது.
சர்க்கரை நோய்
தினமும் சர்க்கரை வியாதியால் அவதிப்படும் பலருக்கும் சங்கு டீ ஒரு நல்ல தீர்வை தரும். ரத்தத்தில் அதிகரித்த உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க சங்கு பூ டீ பயன்படுகிறதாம். இன்சலின் உற்பத்தியையும் சீராக வைக்கும் தன்மையும் இந்த பூவில் உள்ளதாம்.
மன அழுத்தம்
எப்போதுமே மன உளைச்சல், மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு சங்கு பூ டீ அருமருந்தாக இருக்கும். இதற்கு காரணம் இதில் உள்ள அதிக படியான ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்தான். உங்களின் சோர்வான நிலையை நீக்க சங்கு பூ டீ குடித்து வாருங்கள்.
இளமையை நீடிக்க
தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சங்கு பூ டீயை குடித்து வந்தால் உங்களின் உடல் என்றுமே இளமையாகவே இருக்கும். சரும பராமரிப்பு மற்றும் முதிர்ச்சியை தடை செய்ய சங்கு பூ டீ நன்கு உதவுகிறது. அத்துடன் முகத்தை பொலிவாகவும் இது மாற்றுகிறது.
தயாரிப்பு முறை
சங்கு பூ டீயை தயாரிக்க, 2 கப் நீரை கொதிக்க விட்டு 5 சங்கு பூவை அதில் சேர்க்க வேண்டும். 5 நிமிடத்திற்கு பின்னர் இறக்கி கொள்ளவும். சற்று மிதமான பதத்திற்கு வந்த பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் சேர்த்து கலக்கி குடித்து வரலாம்.