சித்தர்கள் கூறும் மூலிகைகளின் ராஜா பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இந்த பூமியில் பலவித செடி கொடிகள் உள்ளன. இவை அனைத்திலும் பலவித நன்மைகள் உண்டு. சில செடிகள் மருத்துவ தன்மை அதிகம் கொண்டதாக இருக்கும். ஒரு சில செடிகள் நம் உயிருக்கே ஆபத்தாக கூட இருக்கலாம். இப்படிப்பட்ட செடிகள் இருக்க சில வகையான செடிகள் மூலிகை தன்மை நிறைந்ததாக உள்ளன.
முக்கியமாக மூலிகைகளின் ராஜா என்று அழைக்கப்படும் அஸ்வகந்தா விந்தைமிக்க சக்திகளை கொண்டதாம். இந்த தொகுப்பில் அஸ்வகந்தா மூலிகையின் முழு பயன்பாட்டையும், இது மனிதனுக்கு எந்த வகையில் எல்லாம் உதவுகிறது முதலிய பல தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
மன அழுத்தம்
நாள் முழுக்க மன அழுத்தத்துடனே இருக்கும் பலருக்கும் இந்த அரிய வகை மூலிகை உதவுகிறது. இவற்றின் மூலிகை தன்மை மூளையின் செயல் திறனை சீராக வைத்து உடல் நிலையை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கும்.
ஹார்மோன்
மனித உடம்பின் முதன்மை பங்கு ஹார்மோன்களுக்கே உள்ளது. உடம்பில் எல்லாவித ஹார்மோன்களும் சரியான முறையில் உற்பத்தி ஆகவில்லை என்றால் பாதிப்பு அதிகம். அஸ்வகந்தாவின் மூலிகை தன்மையால் தைராய்டு ஹார்மோனில் உண்டாக கூடிய கோளாற்றை தடுத்து விடுமாம்.
சிறப்பான தாம்பத்தியம்
தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்போருக்கு அஸ்வகந்தா சிறந்த மருந்தாக பயன்படும். மேலும், இருவரின் ஆற்றலை அதிகரித்து நீண்ட நேரம் செயல்பட இது உதவும். இந்த மூலிகையை அன்றாடம் சிறிதளவு சாப்பிட்டு வரும் தம்பதியினருக்கு நல்ல மாற்றத்தை இது தரும்.
நீண்ட ஆயுள்
நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டோருக்கு இந்த மூலிகை சிறந்த தீர்வை தரும். பலவித ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த மூலிகையின் முக்கிய திறனை பற்றி குறிப்பிட்டுள்ளனர். மேலும்,மனிதனின் உடல் செல்களை புத்துணர்வூட்டி அதிக இளமையாக மாற்றும்.
வலிமை பெற
உடல் முழுவதும் வலிமையாக இருக்க அஸ்வகந்தா மூலிகையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இது எலும்புகள், தசைகள், போன்றவற்றிற்கு அதிக உறுதியை தரும். எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பல மடங்கு ஆற்றல் மிக்கதாக இது மாற்றும்.
தூக்கமின்மை
நாள் முழுக்க உழைத்த பலராலும் இரவில் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இதற்கு சிறந்த தீர்வை தருகிறது அஸ்வங்கந்தா மூலிகை. தினமும் 1 கப் பாலில் இந்த மூலிகையை அரை ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும். தேவைக்கு தேனையும் சேர்த்து கொள்ளலாம்.