இன்றைய தலைப்பு செய்திகள்.! கொரோனா முதல் அம்பன் புயல் வரை.!
இன்றைய தலைப்பு செய்திகள். அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணை.
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,139லிருந்து 1,06,750 ஆக உயர்வு. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298 ஆக உயர்வு. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 லிருந்து 3,303 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் விரிவாக படிக்க…
- வங்க கடலில் உருவான அம்பன் புயல், அதி தீவிர புயலாக மாறி ஒரு மணி நேரத்துக்கு சுமார் 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேற்கு வங்கம் மற்றும் திகா பகுதி இடையே 250 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும். மேலும் விரிவாக படிக்க…
- இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்த ஆலோசனை என தகவல். மேலும் விரிவாக படிக்க…
- பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம். நலவாரியத்தில் பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ.2,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
- சென்னை ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் இதுவரை 1,137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 7672 ஆக உள்ளது. மேலும் விரிவாக படிக்க…
- உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49.82 லட்சமாக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,56,361 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,24,535ஆக உயர்வு. மேலும் விரிவாக படிக்க…
- அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,70,583 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,533 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விரிவாக படிக்க..
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி பாலிமர் நிறுவனத்தின் விஷவாயு கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலையில் இறங்கி போராட்டம். விஷவாயு கசிவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீலகிரியில் வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுயானை வழுக்கி விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
- ஈரோட்டில் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி கொண்டு இருந்த சிறுவன் திடீரென உயிரிழந்தார். 16 வயது பாலிடெக்னிக் மாணவன் வீட்டிற்கு அருகில் திடலில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும் விரிவாக படிக்க…
- தமிழகத்தில் நேற்று 90 கோடியாக குறைந்தது டாஸ்மாக் மது விற்பனை. சனிக்கிழமை மட்டும் ரூ.163 கோடிக்கு மது விற்பனை ஆனது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ரூ.133.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கள்கிழமை ரூ.109.3 கோடிக்கு விற்பனை ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.