கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக போஸ் கொடுக்கும் தல..!
நடிகர் அஜித் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். வலிமை படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டத்திலிருந்து ஒரு அப்டேட் கூட விடாததால் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வந்தனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் வருத்தத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இது அவரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது எனவும் தகவல்கள் பரவி வருகிறது.
Latest Pic Of Our THALA AJITH At Chennai Rifle Shooting Club..????????
Multi-Talented Star For a Reason! ????#ValimaiFLFeastSoon | #Valimai pic.twitter.com/lvOiPLLOr0
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 20, 2021