தல – தளபதி இணைந்து நடித்தால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அஜித் – விஜய் இவர்களது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானாலே, திருவிழா போல தான் இருக்கும். இவர்கள் ஓற்றுமையாக இருந்தாலும் இவர்களின் ரசிகர்கள் சமூக வளைத்ததில் சண்டைபோட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும், சில ரசிகர்கள் இவர்கள் இருவரும் எப்போது இணைந்து படம் நடிப்பார்கள் என காத்துள்ளனர். கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். அதன் பின் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தான் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து நடிக்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது போல் பல நடிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவனியாக நடித்த மகேந்திரன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மகேந்திரனிடம் தல தளபதி வைத்து படம் இயக்கினால் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என கேட்க பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ” மங்காத்தா போலீசாக தலயும், விஜய் அண்ணா கத்தி படத்தில் வரும் ரா லுக் அப்படி இருந்தால் அருமையாக இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும் ஆனால் அதற்கு ஏற்ற கதை அமையவேண்டும். சரியான இயக்குனர் அமைய வேண்டும். எனக்கென்னமோ அதையும் லோகேஷ் கனகராஜ் அண்ணன் பன்னா சரியாக இருக்கும்-னு நான் நினைக்கேன்.” என கூறியுள்ளார்.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…