தல- 61 வெறித்தனமான மாஸான அப்டேட்.!
நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் தற்பொழுது நடிகர் அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தை பற்றி சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் அஜித் அடுத்தாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.