எனது வளர்ச்சியை கண்டு சந்தோசப்படும் நடிகர் இவர் மட்டும் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் பெருமிதம்!
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், பேட்டியின் போது, ஏ.ஆர்.முருகதாஸிடம், அஜித்துடன் ஏன் இணையவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், எங்களது கூட்டணி எப்போது வேண்டுமானாலும் இணையலாம். நான் இன்று இவ்வளவு உயரத்தில் இருப்பதை கண்டு கண்டிப்பாக மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது அஜித் மட்டும் தான் என கூறியுள்ளார்.