கைதி திரைப்படம் ஹிந்தி ரீமேக்கில் இந்த ஹீரோ நடிக்கிறாரா.?
கைதி திரைப்படம் நடிகர் கார்த்தி நடப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாறும் வசூல் செய்த படமாகும்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்தார் இந்த படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மாநகரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.தமிழில் வெளியான இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.அங்கும் ஹிட்டானது.இதில் கதாநாயகியே இல்லாத இந்த திரைப்படம் திரை உலகினர் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது.
இதனை தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ஹீரோ குறித்து எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, ‘இந்தி ரீமேக்கில் பெரிய ஹீரோ ஒருவர் நடிப்பார். ஆனால், யாரும் இறுதி செய்யப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த படத்தின் ரீமேக்கில் ஹிர்த்திக் ரோஷன் அல்லது ரன்வீர் சிங் ஆகியோரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது.இதில் நடிகர் ஹிர்திக் ரோஷன் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…