ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் .இவர் பல ரீமேக் படங்களையும் இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார் . கடைசியாக இவர் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரை வைத்து இயக்கிய 2.0 உலகளவில் பெரும் வெற்றியை பெற்றது.தற்போது அவர் கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது சில பல பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதனை குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அறிவித்திருந்தார்.ஷங்கர் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ராம் சரண் நடிக்க உள்ளதாகவும் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழ் , தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிற மொழியை சார்ந்த மற்றொரு டாப் ஹீரோவும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கூடுதலாக ஷங்கர் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் தற்போது இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று அழைக்கப்படும் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தான் ஷங்கரின் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது ஷங்கரின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக வெளியான தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.உண்மையென்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…