ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவை உச்சத்தில் எடுத்து சென்றது பாகுபலி திரைப்படம். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015ல் பாகுபலி படத்தின் முதல் பாகமும், 2017ல் பாகுபலி இரண்டாம் பாகமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் மிகப் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனையை படைத்தது. இதில் முக்கிய வேடங்களில் பிரபாஸ், ராணா டக்குபதி , சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனரான மிஹீகா பஜான் என்பவராவர். இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப் பாளருமான சுரேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராணா மற்றும் மிஹீகா இருவரும் காதல் செய்வதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்க கூடும் என்றும் கூறியுள்ளார். மேலும் திருமணம் குறித்த கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது பல பிரபலங்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…