உலகம் முழுக்க இருக்கிற இளைஞருக்கு இவர் ஒரு இன்ஸ்பிரேஷன்! நடிகர் ஆர்யா அதிரடி!
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னையில் நடைபெற்ற டெர்மினேட்டர் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட ஆர்யா ட்ரெய்லரை வெளியிட்டு பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், இப்படத்தில் நடித்துள்ள அர்னால்ட் குறித்து பெருமையாக பேசியுள்ளளார். அவர் கூறுகையில், டெர்மினேட்டர் உலகம் முழுக்க பேமஸ். அவரோட படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவரோட பயங்கர ஃபேன் நான். அவரோட எல்லா படமும் எனக்கு பிடிக்கும்.
மேலும், ஜிம் போற எல்லாருக்கும் அவரை தெரியும். அவரோட பேமசுக்கு, அவரோட பாடி பிஸிக் தான் காரணம். இது வரை 7 உலக அழகன் பட்டம் வென்றுள்ளார். இவரு ஆக்ஷன் பண்ணும் போது அவ்வளவு அழகா இருக்கும். உலகம் முழுக்க இருக்குற இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரஷன். என்று கூறியுள்ளார்.