தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்.ஜி.கே ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர். தற்போது படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் சில படங்களில் நடித்தும் வருகிறார்.
அந்த வகையில், சாணிகாயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். இந்த படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. தற்போது நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி முக்கியமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்து சில விஷியங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் குறித்து அவர் கூறுகையில், ” தனுஷை வைத்து படம் இயக்குவது மிகவும் சவாலாக இருக்கிறது. அவர் இப்போது முன்பு மாதிரி இல்லை..தனுஷிடம் நான் நிறைய மாற்றங்கள் கண்டுகொண்டேன் … அவருக்கு 16 வயது இருக்கும்போது நான் துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தேன் அப்போது அவருக்கு ஓன்றுமே தெரியாது.. நிறைய தப்பு வரும்.
இப்பொது நான் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகிறேன்..இந்த திரைப்படத்தின் போட்டோஷூட் எடுக்கும்போது தனுஷிடம் இருந்து நிறைய மாற்றங்கள் பார்த்தேன்.. நான் எப்படி நினைக்கிறேனோ அதே மாதிரி அவரும் செய்துவிடுகிறார். நான் முதலில் பார்த்த தனுஷ் வேற இப்ப பாக்குற தனுஷ் வேற” என கூறியுள்ளார் செல்வராகவன்.
நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…