பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகநாயகன் பத்மபூஷன் செவாலியே கமல்ஹாசன்! #HBDKamalhaasan
தமிழ் சினிமாவின் பெருமை, உலகளவில் இந்திய சினிமாவின் அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பு திறனை மட்டும் பாராட்டலாம் என பார்த்தல் தமிழ் சினிமாவிற்கு ஏன் சினிமாவிற்கே புது புது யுக்திகளை கண்டறிந்த சினிமாவின் எடிசனாக பார்க்கப்படுகிறார். அந்தளவிற்கு இவரது சாதனைகள் இருக்கிறது.
இவர் சினிமாவில் என்ன செய்தார் என்பதை கூறுவதை விட என்ன செய்யவில்லை எனபதை இரண்டு நாள் யோசித்தாலும் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. நாடிபில் ராட்சசன், நடிகர் திலகம் சிவாஜியே தனது கலை வாரிசாக ஒப்புக்கொண்ட கலை தாய் பெற்றெடுத்த திருமகன் உலகநாயகன் கமல்ஹாசன்.
கருப்பு வெள்ளை காலம் களத்தூர் கன்னமாவில் இருந்து ஏரோ 3டி தொழில்நுட்பத்தில் அவர் உருவாக்கிய விஸ்வரூபம் என சினிமா இருக்கும் காலம் வரையில் கமல்ஹாசன் எனும் ஆளுமையை பற்றி இந்த உலகம் பேசிக்கொண்டுதான் இருக்கும்.
கலைத்தாயின் மகனுக்கு தமிழக அரசு 1980ஆம் ஆண்டு கலைமாமணி பட்டமும் வழங்கியது. 1990இல் இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டமும், 2014இல் பத்ம பூஷன் பட்டமும் கொடுத்து கௌரவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு நாடிப்பின் உயரிய விருதாக கருதப்படும் செவாலியே விருது பிரான்ஸ் நாட்டில் வழங்கப்பட்டு உலகநாயகனை கௌரவித்தது. செவாலியே விருதை வென்ற இரண்டாவது தமிழ் சினிமா நடிகர் இவர்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இவருக்கு முன்னோடி.
திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது முதலில் மூன்றாம் பிறை படத்திற்கு கிடைத்தது. அதன் பிறகு இரண்டாவது முறையாக நாயகன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றார். மூன்றாவது முறையாக தேவர் மகன் படத்திற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார். நான்காவது முறையாக இந்தியன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்று சென்றார்.